#MeTooபெரிய நட்சத்திரங்கள் அமைதி காப்பது ஏன்?

மீ டூ விவகாரம் குறித்து பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்கள் வாயைத் திறக்காமல் அமைதி காப்பது ஏன் என நடிகை கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் மீ டூ விவகாரம் பெரும் அளவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. திரையுலகத்தில் தான் பலரும் அவர்களது பாலியல் தொந்தரவுகளைப் பற்றி அதிகமாகப் பேசிவருகிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலக நடிகைகள் அவர்களுக்கு நடந்த விஷயங்களைப் பற்றி பரபரப்பாகப் பேசி வருகிறார்கள்.
இந்த மீ டூ விவகாரம் குறித்து பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்கள் வாயைத் திறக்காமல் அமைதி காப்பது ஏன் என நடிகை கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஷபனா ஆஸ்மி, கரன் ஜோஹர் போன்றவர்கள் எங்கே போனார்கள். எல்லா விஷயங்களுக்கும் குரல் கொடுக்கும் ஷபனா ஏன் இதில் மௌனம் காக்கிறார். அவர்களும் இது பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும்.
'ஜிம் தோற்றம், ஏர்போர்ட் தோற்றம்' என பத்து முறை ட்வீட் போடுவார் கரண். ஆனால், இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இது அவர்களுக்கு 'பிரட் அன்ட் பட்டர்' மாதிரி. திரையுலகம் ஒரு முக்கியமான மாற்றத்தை நோக்கி நகரும்போது அவர்கள் எங்கே? பெரிய நட்சத்திரங்கள் ஏன் அவர்களின் விவரங்களை இதுவரை ஷேர் செய்யவில்லை. நான் மட்டுமே அது பற்றி பேசியிருக்கிறேன். ஆனால் அது மட்டும் போதாது,” என்று கங்கனா கூறியுள்ளார்.
மேலும், சமீபத்தில் ‘குயின்’ பட இயக்குநர் விகாஸ் பாஹ்ல் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம்சாட்டினார் கங்கனா. ‘குயின் படப்பிடிப்பின்போது, என்னிடமும் விகாஸ் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தார். படப்பிடிப்பில் பலமுறை என்னைக் கட்டிப்பிடித்தார். உங்கள் வாசனை எனக்குப் பிடித்திருக்கிறது என்பார்’ இவ்வாறு விகாஸ் பாஹ்ல் மீது கங்கனா குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இவரோடு நில்லாமல் ஹிர்திக் ரோஷன் மீது கங்கனா புகார் ஒன்றைக் கூறியுள்ளார். அதில் ``சிலர் தங்கள் மனைவிகளை வைத்துக்கொண்டு இளம்பெண்களுடன் சுற்றிவருகின்றனர். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். உதாரணத்துக்கு ஹிர்திக் ரோஷனைக் கூறுகிறேன். ஹிர்திக் அவரின் மனைவி பின்னால் இருக்கும்போதே என்னுடன் டேட்டிங் செய்துள்ளார். மனைவி இருக்கும்போது இளம்பெண்களுடன் டேட்டிங் செல்லும் ஹிர்திக் ரோஷனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவருடன் இணைந்து யாரும் வேலை செய்யக் கூடாது' எனக் கூறியிருந்தார். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.