பெண்களின் காலில் விழுந்து ஆதிவாசிகள் போராட்டம்.. சபரிமலையில் பரபரப்பு!

சபரிமலை ஆலயத்திற்கு செல்லும் பெண் அடியார்களின் கால்களில் வீழ்ந்து, கோவிலுக்குள் செல்ல வேண்டாம் என சிலர் கோரிவருகின்றமை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் சபரிமலை நடை திறக்கப்படவுள்ள நிலையில், உச்சநீதிமன்றின் தீர்பையடுத்து, இந்த ஆண்டு (2018) வயது எல்லையின்றி பெண்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.

எனினும் அவர்களை நிலக்கல்லடியில் வைத்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் போராட்டம் நடத்தும் இந்துமத அமைப்புக்கள் திருப்பி அனுப்பியபோதும், பொலிஸார் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இதையடுத்து, அனைவரும் ஆலயம் நோக்கி செல்கின்றனர். இந்நிலையில்,  உட்செல்ல  வேண்டாம் எனக் கோரி, போராட்டக்காரர்கள் பெண் அடியார்களின் கால்களில் வீழ்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு 55 வயதிற்கு உட்பட்ட பெண்கள் செல்வது தீட்டு என்று ஆன்மீகம் கூறுகிறது.

இதனடிப்படையில் மாவிடாய் நிறைவுற்ற 55 வயதிற்கு மேற்பட்ட பெண்களே சபரிமலைக்கு செல்லமுடியும் என்ற வழக்காறு இத்தனை காலமாக இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 12 வருடங்களுக்கு முன்னர், அனைத்து பெண்களும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டது. அதில் அனைத்து வகையிலான பெண்களும் சபரிமலை ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, இந்த ஆண்டு நடை திறக்கப்படும் நாளான இன்று ஆலயம் நோக்கி பெண்கள் நகர்கின்றனர்.

இந்நிலையில், மேற்படி அசம்பாவிதங்கள் நேர்ந்துள்ளதால், சபரிமலை வளாகத்தில் பதற்றம் நீடித்தவண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.