அனந்தி சசிதரனின் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகமா?? பின்னனி என்ன??

உள்ளூர் செய்திகள்:வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தமது புதிய கட்சி குறித்து இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவர் தனது புதிய கட்சி குறித்து தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமது கொள்கையுடன் இணங்கிச் செல்கின்ற பலர் தம்முடன் இணைய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ள நிலையில் அனந்தி தனது புதிய கட்சி குறித்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#வடமாகாண சபை   #புதிய கட்சி   #ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்   annanthi  #jaffna  #tamilnews  #srilanka

No comments

Powered by Blogger.