மட்டு மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு - மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கான ஆரம்ப கட்ட துயிலுமில்லங்களின் சிரமதானப் பணி மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மாவடி முன்மாரி, பனிச்சையடி முன்மாரி ஆகிய கிராமங்களில் உள்ள மாவீரர் குடும்பங்களின் பெற்றோர்கள், தேசத்தின் வேர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் இணைந்து இதில் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் சகலதும் பூர்த்தியாகியுள்ளன என அறிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.