யாழில் இருந்து கஞ்சா கடத்தியவர் திடீர் கைது!

யாழ்பாணம் – நுவரெலியா வழித்தட தனியார் பேருந்து ஒன்றில் நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருத்தை பேருந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வழிமறித்த பொலிஸார் குறித்த நபரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி விசேட பிரிவு பொறுப்பதிகாரி டி எம் சத்துரங்க தலமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

கஞ்சாவுடன் கைதானவர் ரம்பாவையை சேர்ந்த இளைஞன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் கைது செய்யப்பட்டவரையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த இருப்பதாக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.