ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள்!

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது, இடப்பெயர்வு, மற்றும் உள்ளகப் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சி மாநாடு, நேற்று பெல்ஜியம், பிரசல்ஸில் ஆரம்பமானது. இதன் இரண்டாம் நாள் அமரவுகள் இன்று நடைபெற்ற நிலையில், பிராந்தியம் முகம் கொடுக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

இதன்போது, இடப்பெயர்வு, உள்ளகப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதில், ஆட்கடத்தலைத் தடுத்தல், நாடுகளின் வெளிப்புற எல்லைகளைப் பாதுகாத்தல் மற்றும் பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.