மானிப்பாய் பொலிஸார் அடாவடத்தனம் தீருமா?

மானிப்பாய்- அரசடி வீதியில் நேற்று கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸார் ஒருவர் அந்த வீதியால் சென்ற பொதுமகன் ஒருவரை மறித்து ஆவணங்களைச் சோதனையிட்டதுடன் அவரை கெட்டவார்த்தைகளால் திட்டித்தீர்த்தாக முறையிடப்பட்டுள்ளது.
அனைத்து ஆவணங்கள் இருந்த போதும் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளையும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் சாரதி தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தினை வைத்திருந்தார். இந்நிலையில் பயிலுநர் காப்பீட்டுப் பத்திரம் இல்லை எனக் கூறியே பொலிஸ் அதிகாரி முரண்பட்டுள்ளார். 
எனினும் சாதரண காப்பீட்டுப்பத்திரம் உள்ளது. பயிலுனர்காப்பீடு தொடர்பில் யாரும் தன்னை அறிவுறுத்தவில்லை என வாகன சாரதி தெரிவித்துள்ளார். இதனையடுத்தே வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளினை கட்டி இழுத்துச் சென்றனர்.
பின்னர் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளின் தலையீட்டையடுத்து தண்டம் மற்றும் வழக்குகள் எதுவுமின்றி மோட்டார் சைச்கிள் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு யாழ்.செயலக மோட்டார் திணைக்களத்தின் ஊடாக விண்ணப்பித்தும் 10 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் சாரதி அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்கவி்லை என தெரிவித்துள்ளார்.
எனினும் வலுவுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை அவர் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.