அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை' - பாகிஸ்தான் வீரருக்கு பும்ராவின் `நச்' பதில்!
இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா தனித்துவமான பௌலிங் ஸ்டைல் கொண்டவர். தனித்துவமான பௌலிங் ஸ்டைலால் பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.
இதற்கு உதாரணம் தான் கடந்த இங்கிலாந்து தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருவதுடன் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக மாறி வருகிறார். இதற்கிடையே பும்ராவின் பௌலிங் ஸ்டைல் குறித்து கருத்து தெரிவித்து இருந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்யூப் ஜாவித், ``இதுபோன்று தொடர்ந்து பந்துவீசினால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படும்" எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு பும்ரா தற்போது பதிலளித்துள்ளார்.அதில், ``நான் விமர்சகர்களின் கருத்துகளை எல்லாம் கண்டுகொள்ள மாட்டேன். அது பற்றி கவலையில்லை.
கிரிக்கெட்டில் காயம் அடையாத ஒரு பௌலரை காட்டுங்கள் பார்க்கலாம். எனது உடற்தகுதி குறித்து எனக்கு அக்கறை இருக்கிறது. காயம் ஏற்படாமல் பிட்டாக இருக்கவே முயற்சி செய்து வருகிறேன். சிறந்த பௌலிங் ஸ்டைல் என்பதே கிடையாது. யாருக்கு எப்படி வசதியாக இருக்குமோ அப்படி தான் பந்துவீசி வருகிறார்கள். அதுபோலவே எனக்கு வசதியான முறையிலேயே நானும் பந்துவீசுகிறேன். என்னுடைய பலம் அறிந்து பந்துவீசி வருகிறேன். ஆஸ்திரேலியா தொடருக்கு இன்னும் நாள் இருக்கிறது. பயிற்சியாளருடன் தொடர்பில் இருந்து ஆஸ்திரேலியா தொடருக்கு ரெடியாகி வருகிறேன்" என்றார்.
#jasprit #bumrahindian #teamcricket #இந்திய #அணிஜஸ்ப்ரீத் #பும்ரா

கருத்துகள் இல்லை