சர்காரில் ‘வேற லெவல்’ கனெக்‌ஷன்!

விஜய் நடிக்கும் சர்கார் படம் குறித்த சுவாரஸ்யத் தகவலை வெளியிட்டுள்ளார் பாடலாசிரியர் விவேக்.

துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களையடுத்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படம் சர்கார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இதில் வரலட்சுமியும் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், விவேக் பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் கவனம்பெற்றன.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள, 'டாப்பு டக்கரு' எனும் பாடலில் அமைந்துள்ள வரிகள் குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பாடலாசிரியர் விவேக். அப்பதிவில், “நைஃபைத் தொட்டவன் ஃப்ளாட்டா முடிக்கிறேன் நீட்டா, லோடேடு கன்னுல தோட்டா என இடம்பெற்றுள்ள வரிகளில் அமைந்துள்ள நைஃப் மற்றும் கன் ஆகியவை விஜய் நடித்த ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’யை சர்காரில் இணைப்பதுபோல அமைந்துள்ளன” எனும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

சர்காரில் இன்னொரு சுவாரஸ்யமும் அமைந்துள்ளது. அதாவது நாளை (அக்டோபர் 19) சர்கார் டீசர் வெளியாகவுள்ளது. இதே தேதியில்தான் இந்த கூட்டணியில் உருவான முந்தைய படமான ‘கத்தி’ படத்தின் ட்ரெயிலரும் வெளியாகியிருந்தது.

No comments

Powered by Blogger.