வீரர்களின் வெளிநாட்டு தொடரில் குடும்பத்தாருக்கு அனுமதி இல்லை

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு தொடர்களின் போது தங்கள் மனைவி, குழந்தைகளை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் இதற்க்கு பிசிசிஐ சில கட்டுப்பாடு மற்றும் விதிகளை விதித்துள்ளது. அதாவது வெளிநாட்டு
தொடர்களில் விளையாடும் போது 10 நாட்களுக்கு மேல் வீரர்களின் மனைவிகள் மற்றும் குடும்பத்தார் அவர்களுடன் தங்கக்கூடாது. அவர்கள் நாடு திரும்ப வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு தொடர்களின்போது தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தாரை தொடர் முழுவதும் எங்களுடன் தங்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார் இந்திய அணியின் சார்பாக கேப்டன் விராட் கோலி. இதுக்குறித்து பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது.

விராத் கோலியின் கோரிக்கையை பிசிசிஐ அங்கீகரித்தது என்று ஊடங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் பிசிசிஐ தரப்பில் ஊடங்களில் வெளியான செய்தி உண்மை இல்லை என்று கூறப்பட்டு உள்ளது.

இதுக்குறித்து பிசிசிஐ அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் கூறுகையில், இந்திய அணி சார்பில் வெளிநாட்டு தொடர்களின்போது தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தாரை தொடர் முழுவதும் எங்களுடன் தங்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதைப்பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது இதுபற்றி பேசி எதுவும் இல்லை. கோரிக்கை ஆலோசனையில் உள்ளது. இதுப்பற்றி முடிவெடுக்க சிறிது காலம் ஆகலாம் எனக் கூறினார்.


#Virat   #Kohli   #BCCI   #WAGs   #Team India   #விராட்   #கோலி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.