தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டு: நந்திதா பதில்!

தனது தந்தை மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார் நடிகையும், இயக்குநருமான நந்திதா தாஸ்.
இந்திய திரைத் துறை பெண் படைப்பாளிகளில் முக்கியமானவர், இயக்குநர் மற்றும் நடிகை நந்திதா தாஸ். தமிழில் 'அழகி', 'கன்னத்தில் முத்தமிட்டால்' ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை மீ டூ மூவ்மெண்ட் மூலம் வெளியே சொல்ல முன்வந்துள்ளனர். நாடு முழுவதும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உருவாகியுள்ளது.

நந்திதா தாஸ், இந்த இயக்கத்துக்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், நேற்று முன்தினம் (அக்டோபர் 16) நந்திதா தாஸின் தந்தையும், ஓவியருமான ஜதின் தாஸ், 2004ஆம் ஆண்டு அவருடைய பணியிடத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஜதின் தாஸ், இந்தப் புகார் முற்றிலும் பொய்யாகவும், ஆபாசமாகவும் இருப்பதாகக்கூறி மறுத்தார். இதனையடுத்து தன் தந்தை மீதான புகாரைப் பற்றி நந்திதா தாஸ், “மீடூ இயக்கத்துக்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும், என் தந்தை நேரடியாக நிராகரிக்கும் அவர் மீதான புகார்கள் சற்று என்னைப் பாதித்தாலும், இந்த மீடூ இயக்கத்தை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். நான் ஆரம்பத்திலிருந்து சொல்வதைப் போல, இப்போது பாதிப்படைந்த பெண்களின் புகார்களை நாம் கவனித்துக் கேட்க வேண்டும். அதே சமயம், தவறான புகார்கள் மூலம் இந்த இயக்கம் அதன் முக்கியத்துவத்தை இழக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னைத் தொடர்பு கொண்டு, எனக்கு ஆதரவு தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் இந்தச் சமயத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

No comments

Powered by Blogger.