யாழில் சூழல் அரசியலும் நிப அபகரிப்பும் என்ற கருப்பொருளில் உரையரங்கு!

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (20) உரையரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூழல் அரசியலும் நிப அபகரிப்பும் என்ற கருப்பொருளில் இந்த உரையரங்கு இடம்பெறுகிறது.


அண்மைக்காலத்தில் வடக்கின் எல்லையோர மாவட்டங்களில் அதிகரித்துள்ள நிலஅபகரிப்பு, மகாவலி திட்டம் என்பவை தொடர்பான விழிப்புணர்வு முயற்சியாக இந்த உரையரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வு இடம்பெறும். வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்வில் நிலாந்தன் தொடக்கவுரையாற்றுகிறார். வனங்களும் நிலஅபகரிப்பும் என்ற பொருளில் பொ.ஐங்கரநேசன், தொல்லியலும் நிலஅபகரிப்பும் என்ற பொருளில் ஜெயராஜ், மகாவலியும் நில அபகரிப்பும் என்ற பொருளில் முன்னாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் க.குருநாதன், சட்டங்களும் நிலஅபகரிப்பும் என்ற பொருளில் சட்டத்தரணி ரஞ்சித்குமாரும் உரையாற்றுகிறார்கள்.

இரத்தமும் சத்தமுமில்லாமல் எமது நிலங்களை பறித்து கொண்டிருக்கும் பச்சை யுத்தம் பற்றிய உரையரங்கு என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.