சர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்!

சீனாவில் ஆரம்பமாகிய சர்வதேச Dragon படகுப் போட்டியில் அந்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளனர்.

சீனாவில் சாங்கிங் நகரில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகிய சர்வதேச Dragon படகு போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

அந்நாட்டில் சாங்கிங் நகரில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டியில், கனடா, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அந்தவகையில் முதலாம் நாளான இன்று நடத்தப்பட்ட 200 மற்றும் 100 மீட்டர் படகு போட்டிகளில் சீனாவைச் சேர்ந்த வீரர்களே தங்கப்பதக்கங்களை வென்றனர்.

மேலும் 400 மற்றும் 500 மீட்டர் படகு போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.