முள்ளிக்குள மக்களின் போராட்டத்தையடுத்து மூடிய வீதிகளை மீண்டும் பாவனைக்கு!

முள்ளிக்குளம் கிராமத்தில் மீண்டும் கிளர்ந்தெழுந்த மக்களின் போராட்டத்தையடுத்து கடற்படை தான் அமைத்த முட்கம்பி வேலியை அகற்றியுள்ளது. கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை திடீர் என கடற்படையினர் முட்கம்பிகள் கொண்ட வேலியினால் வீதியை இடை

மறித்து அடைத்தமையினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை முதல் கடற்படையினருக்கும்,முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை திடீர் என கடற்படையினர் முற் கம்பிகள் கொண்ட வேலியினால் வீதியை இடை மறித்து அடைத்திருந்தனர்.இதனையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை முதல் கடற்படையினருக்கும்,முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினை சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.முள்ளிக்குளம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மன் விடுவிக்கப்பட்ட சுமார் 77 ஏக்கர் காணியில் மக்கள் நடமாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
-இந்த நிலையில் குறித்த காணி பகுதிக்குச் செல்லும் பிரதான வீதிகளை நேற்று சனிக்கிழமை(20) தொடக்கம் கடற்படையினர் இடை மறித்து முற் கம்பிகளினால் வேலிகள் அடைத்து மக்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்து வந்துள்ளனர். -நேற்று சனிக்கிழமை(20) முதல் மக்கள் குறித்த வீதிகளினாடாக பயணம் செய்ய முடியாத நிலையை கடற்படையினர் ஏற்படுத்தி இருந்தனர்.

-இந்த நிலையில் முள்ளிக்குளம் ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை திருப்பலி நிறைவடைந்த நிலையில் மக்கள் மீண்டும் திரும்பிச் செல்லுகின்ற போது கடற்படை முகாமில் இருந்த கடற்படையினர் குறித்த வீதிகளினாடாக சென்ற மக்களை இடை மறித்து விட்டார்கள். இதனால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் மக்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

தொடர்ச்சியாக கடற்கடையினர் பாதைகளை இடை மறித்து மக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு வருகிறனர். முக்கிள்குளம் மக்களின் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றனர்.

உயர் அதிகாரியிடம் இருந்து வந்த உத்தரவிற்கு அமைவாகவே குறித்த பாதைகளை மூடியதாக தெரிவித்த கடற்படையினர் மக்கள்  எதிர்ப்பைத் தொடர்ந்து மூடி வைத்திருத்த வீதிகளை மீண்டும் மக்களின் பாவனைக்காக கடற்படையினர் திறந்து விட்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.