கொழும்பில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்

கொழும்பு - மட்டக்குளி, முகத்துவாரம் கடற்கரைக்கு நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது நண்பர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளார்.

15 வயதுடைய முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுவனை தேடும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
Powered by Blogger.