உலகின் மிக நீண்ட கடல் பாலம் இன்று திறக்கப்பட்டது!

சீனா – ஹொங்கொங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டுள்ளது.


ஹொங்கொங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்வதற்கான இப்பாலம் 68 மில்லியன் மக்களை இணைக்கின்றது.

இப்பாலத்தின் உதவியால் சீனா-ஹொங்கொங் இடையேயான பயண நேரம், 3 மணித்தியாலங்களிலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது.

இதனூடாக பயணம் செய்ய சிறப்பு வாடகைக் கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்த பாலம், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.