மாகாண சபைகளில் சர்வாதிகாகர ஆட்சி நடத்த வேண்டாம்!

மாகாண சபை தேர்தலை பிற்போடுவது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து அரசாங்கத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.


மாகாண சபைகளின் அதிகாரத்தை ஆளுநர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வழங்குவது ஜனநாயகமற்ற செயற்பாடு என்றும் சர்வாதிகாரத்திற்கு ஒப்பானதென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்துவ ஆட்சியென்பது சர்வாதிகாரத்தின் இரட்டைச் சகோதரனைப் போன்றது. அந்தவகையில், காலாவதியான மாகாணசபைகளில் அவ்வாறான ஆட்சி இடம்பெறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை காலதாமதமாகின்றமை தொடர்பாகவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குறித்த கடிதம் உள்ளுாராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சு, உள்ளுாராட்சி மன்றங்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வேலைத்திட்டங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றுவரை 6 மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ள அதேவேளை, இன்று நள்ளிரவுடன் வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.