மைத்திரி வழங்கியுள்ள அவசர உத்தரவு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயமாக சீஷேல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி அங்கிருந்து அவசர உத்தரவினை விடுத்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு, இது தொடர்பான பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயங்க வேண்டாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு தேவையான உலர் உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக முப்படையினரின் உதவியை பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு சபை பிரதானிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

#Maithripala Sirisena   #srilanka  #tamilnews   #ஜனாதிபதி   #காலநிலை  #நிவாரணம்  #சிறிசேன   #துமிந்த திஸாநாயக்க    #உலர் உணவு

No comments

Powered by Blogger.