றோ அமைப்புடன் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்!

இந்தியாவின் றோ புலனாய்வு சேவை அமைப்புடன் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இருந்தால், அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, தங்காலை ஹேனகடுவ விகாரைக்கு இன்று காலை சென்றிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் தினமும் நெருக்கடியை ஏற்படுத்திக்கொள்கிறது. றோ புலனாய்வு சேவையுடன் தொடர்புள்ள அமைச்சர்கள் இருக்கின்றனர் என்பதை கூற முடியாது.

அமைச்சர் மகிந்த அமரவீர அப்படி கூறுவராக இருந்தால், அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் இருக்குமாயின் அது அரச துரோக செயல்.

எனினும் அமைச்சர்களுக்கு றோ அமைப்புடன் தொடர்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது குறித்து விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும்.

அரசாங்கம் இப்படி அமைதியாக இருக்க முடியாது. போர் நடைபெற்ற காலத்தில் கூட நாங்கள் அப்படி இருக்கவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.