கொழும்பை முடக்கிய கறுப்பு உடையினரின் போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில்  கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.


”கருப்புச் சட்டைப் போராட்டம்” என இது பெயரிடப்பட்ட இப்போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கருப்பு நிற ஆடை அணிந்திருந்தனர்.

கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

பொதுமக்களுக்கும் அவர்களின் அன்றாட செயற்பாடுகளுக்கும் இடையூறு விளைவிக்காத வகையில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

எந்தவொரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் போராட்டத்தில் கலந்துகொள்ள இடமளிக்கப்படவில்லை.

No comments

Powered by Blogger.