மட்டக்களப்பில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக வடகிழக்கில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் மட்டக்களப்பில் ஆசிரிய கலாசாலையின் மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.

அடிப்படை சம்பளத்தினை 1000 ரூபாவாக மாற்று, மாற்றமுறும் மலையகத்திற்கு நமக்காக நாம், ஒன்றிணைந்து போராடுவோம் நாளை நமதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.நாட்டின் பொருளாதாரத்திற்கான முதுகெலும்பாகவுள்ள தோட்டத்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக தேயிலைக்கு உரமாக்கப்பட்டே வருவதாகவும் அவர்களின் வாழக்கை தொடர்பில் யாரும் அக்கரை செலுத்துவதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக தோட்டத்தொழிலாளர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுமானால் நாடளாவிய ரீதியில் ஆசிரிய, மாணவர்களை இணைத்து போராடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.