முதலமைச்சர் தனியாக கட்சி ஒன்றை உருவாக்கினால் இணைந்து பயணிக்க தயாா் தமிழ்தேசிய மக்கள் முன்னணி!

வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் ”தமிழ் மக்கள் கூட்டணி” என்ற பெயாில் புதிய கட்சி ஒன்றிணை இன்று அறிவித்திருக்கும் நிலையில், புதிய கட்சி அறிவிப்புக்கான கூட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளா மல் தவிா்த்திருக்கின்றது.


முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் முரணப்பாடுகள் வலுத்த நிலையில் முதலமைச்சா் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனியாக கட்சி ஒன்றை உருவாக்கினால் அவருடைய தலமையி ல் இணைந்து பயணிக்க தயாா் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது.

இதற்கிடையில் முதலமைச்சருடைய கட்சியில் ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியை இணைத்து கொள்வதில் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு உடன்பாடற்ற தன்மை காணப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சா் தனது கட்சியை அறிவிக் கும் கூட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்வில்லை.

இது குறித்து பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றது. குறிப்பாக முன்னணி முதலமைச்சருடன் இ ணைந்து கொள்வதற்கு நிபந்தனைகளை விதித்ததாகவும், அதனால் உண்டான பிரச்சினைகளாலேயே முன்னணி முதல மைச்சாின் கட்சி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.  

No comments

Powered by Blogger.