தமிழீழத் தேசிய மாவீரர் நாள் -அவுஸ்திரேலியா.!

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில்

அவுஸ்திரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தமிழர் வாழும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் இவ்வேளையில், அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநில,மெல்பேர்ன்  நகரில்  அமைந்துள்ள  ஸ்பிரிங்வேல் நகர மண்டபத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி, செவ்வாய்க்கிழமை மாலை 6மணி  முதல் தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு முன்பாக மெல்பேணில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை விரைவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் பணிமனையுடன் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இதற்காக  அவுஸ்திரேலியா  தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிவித்தலும், மாவீரர் நாள் பற்றிய விளம்பர மடலும்  இத்துடன் மீண்டும் ஒருமுறை உங்கள் கவனத்திற்காக இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

தயவுகூர்ந்து  இவ்வறிவித்தல்களை  உங்கள் ஊடகங்களினுடாக தொடர்ச்சியாக வெளியீட்டு, அவுஸ்திரேலியா மெல்பேர்ண் வாழ் மக்களிற்கு உரிய முறையில் தெரியப்படுத்தவும். இதற்கு  உங்களாலான  முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
அவுஸ்திரேலியா

No comments

Powered by Blogger.