லெப்.கேணல் டயஸ் உட்பட்ட 26 மாவீரர்களி​ன் நினைவு நாள்!

ஜெயக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் மாங்குளம் மற்றும் கனகராயன்ஆற்று பகுதிகளில் காவியமான லெப்.கேணல் டயஸ் உட்பட்ட 17 மாவீரர்களினதும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளில் காவியமான ஒன்பது மாவீரர்களினதும் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
கடந்த 06.10.1998 அன்று மாங்குளம் நோக்கி முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில்,

லெப்.கேணல் தீபராஜ் (டயஸ்) (சுப்பிரமணியம் வரதச்சந்திரன் - அம்பாறை)

கப்டன் இலக்கியன் (லீனஸ்பொன்னுக்கோன் ஜெறோம் எட்வின் - யாழ்ப்பாணம்)

கப்டன் மதர்சகுமார் (கோகுலன்) (நாகலிங்கம் சிவநேசன் - மட்டக்களப்பு)

கப்டன் கெங்காதரன் (சிவசுப்பிரமணியம் பகீரதன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தமிழ்மணி (யோதி) (கோபாலப்பிள்ளை நமசிவாயம் - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் புதியவன் (தில்லையம்பலம் குமார் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் நிவசங்கர் (தேவசகாயம் பகீரதன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை பிரியன் (தம்பிப்பிள்ளை பேரின்பநாயகம் - மட்டக்களப்பு)

வீரவேங்கை தர்மன் (ஞானப்பிரகாசம் தேவன் - அம்பாறை)

வீரவேங்கை முத்தனன் (முக்கண்ணன்) (அருள்நேசலிங்கம் அமலன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை சத்தியாகரன் (வெள்ளைத்தம்பி விஜயந்தராசா - மட்டக்களப்பு)

வீரவேங்கை லோகிதா (விநாயகமூர்த்தி குணவதி - மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

கனராயன்ஆற்றுப் பகுதியூடாக முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில்,

மேஜர் கலாநிதி (இராசேந்திரம் நந்தினி - யாழ்ப்பாணம்)

கப்டன் சாம்பவி (இராசலிங்கம் ஈஸ்வரி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் இசைமகள் (தயினேஸ் அன்ரனிநிரோசா - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் சாளி (வேல்சாமி ஜெயந்தி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அறமலர் (சண்முகலிங்கம் மதிவதனி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கனிமகள் (தம்பிராசா சுதாயினி - முல்லைத்தீவு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம் மாவீரர்களினதும் இதேநாள்

மட்டக்களப்பு அலையடிவேம்பு பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய,

லெப்டினன்ட் சுதந்திரதீபன் (முருகேசு லோகநாதன் - அம்பாறை)

மட்டக்களப்பு களுதாவளைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய,

லெப்டினன்ட் பவசிவன் (சோமசுந்தரம் குணசுந்தரம் - மட்டக்களப்பு)

கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய,

லெப்டினன்ட் தேனிசை (சந்தியா) (யோசப் இராஜேஸ்வரி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பட்டு (குமாரசாமி மஞ்சுளா - கிளிநொச்சி)

வீரவேங்கை வேல்விழி (தர்மகுலராசா பிறேமலதா - யாழ்ப்பாணம்)

திருகோணமலை மல்லிகைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய,

மேஜர் எழிலமுதன் (இம்ரான்) (சிவப்பிரகாசம் மோகனராசா - திருகோணமலை)

லெப்டினன்ட் சபேசன் (கணபதிப்பிள்ளை கரிதரன் - திருகோணமலை)

யாழ்ப்பாணம் கட்டுவன் பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிய,

லெப்டினன்ட் கனைத்தேவன் (ஜயாத்துரை சுஜீபன் - யாழ்ப்பாணம்) ஆகிய மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.