செய்தியாளர் கஷோகியின் மகன்- சவுதியிலிருந்து அமெரிக்கா செல்ல அனுமதி

கொலை செய்யப்பட்ட சவுதி அரேபியச் செயலாளர் ஜமால் கஷோகியின் மூத்த மகன் சல்லா தமது குடும்பத்துடன் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுள்ளார்.


அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தமது இரங்கலைத் தெரிவிக்க திரு சல்லாவைச் சென்று பார்த்தார். அப்போது இருவரும் இறுக்கமான முகத்துடன் கைகுலுக்குவதைக் காட்டும் படம் வெளியாகியுள்ளது.

அதனையடுத்து, திரு சல்லா மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக, மனித உரிமை அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டது.

திரு சல்லா அமெரிக்கா புறப்பட்டுவிட்டதை, அமைப்பின் நிர்வாக இயக்குநர் AFP செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.

சவுதி அரசாங்கம் அது குறித்து விளக்கமளிக்கவில்லை. 
Powered by Blogger.