மாணவியின் சடலம் மட்டக்களப்பில் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து மாணவி ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


கல்லடி, உப்போடை பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவியொருவரது சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாவற்குடாவில் உள்ள வீடொன்றில் இருந்து பாடசாலைக்கு சென்றுவந்த மாணவியை நேற்று காலை முதல் காணாத நிலையில் நேற்று மாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net   #batticalo  Student #police
Powered by Blogger.