நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்-மல்வத்து- அஸ்கிரிய பீடங்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டுமென மல்வத்து- அஸ்கிரிய பீடங்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளது.


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தொடர்பாக சபாநாயகர், மல்வத்து- அஸ்கிரிய பீடங்களை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து குறிப்பிட்டுள்ளார். இதன்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

மேலும் நாட்டில் பிரதமர் யார் என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் பிரதமர் நியமனம் அரசியலமைப்பின் பிரகாரம் அமைய வேண்டுமென அப்பீடங்கள் வலியுறுத்தியுள்ளன. அவர்கள் தொடர்ந்து கூறுகையில்,

“இரு தரப்பினரும் தன் பக்கமுள்ள நியாயங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றமையால் நாட்டில் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்குமே ஒழிய தீர்வை பெற முடியாது.

ஆகையால் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் இரு தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டும். மோதல்கள் ஊடாகவோ கருத்துக்களை வெளியிடுவதின் ஊடாகவோ தீர்வை பெற முடியாது. இதனால் நாட்டின் அமைதிக்கே பாதிப்பு ஏற்படும் .

ஆகவே  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதனூடாகவை தீர்வை பெற முடியும்” என மல்வத்து- அஸ்கிரிய பீடங்கள் தெரிவித்துள்ளன. 

No comments

Powered by Blogger.