வடக்கு விவசாயிகளுக்கான சலுகைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: அங்கஜன்

நாட்டின் ஏனைய மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் வடக்கு மாகாண விவசாயிகளுக்கும் கிடைக்கவேண்டுமென விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அலுவலகம் கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதியமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

தற்போது நெல், உருளைக்கிழங்கு, சோளம், சோயா, மிளகாய், பெரியவெங்காயம் போன்ற 6 பயிர்களுக்கு காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சிறிய வெங்காயம், வாழை, நிலக்கடலை மற்றும் உளுந்து ஆகியவற்றையும் இத்திட்டத்தில் உள்வாங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதியமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் அவற்றிற்கும் காப்புறுதி கிடைக்குமென குறிப்பிட்ட பிரதியமைச்சர், இனிமேல் துணிந்து விவசாயத்தை செய்யலாமென நம்பிக்கை தெரிவித்தார்.

#அங்கஜன்  #நெல்  #உருளைக்கிழங்கு  #சோளம்  #சோயா  #மிளகாய்  #பெரியவெங்காயம்   #jaffna  #ankkayan  #srilanka   #tamilnews

No comments

Powered by Blogger.