அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வெடி விபத்தில்4 இலங்கையர்கள் காயம்!

அவுஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் இடம்பெற்ற வெடி விபத்தில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


குறித்த சம்பவம் கான்பராவில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு இலங்கையர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும், மேலும் 40 பேர் சிறு தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் இருந்த எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்தவர்கள் கான்பராவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த நால்வரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், முகம், கழுத்து, மார்புப்பகுதியில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 
Powered by Blogger.