பத்து வயது சிறுவனுக்கு வைல்ட் லைஃப் போட்டோகிராபர் விருது

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் ரன்தீப் சிங் என்பவரின் மகனான அர்ஷ்தீப் சிங், தனது 6 வயதாக இருக்கும்போது கடந்த 2012-ம் ஆண்டு வைல்ட் லைஃப் போட்டோகிராபியைத் தொடங்கியிருக்கிறார். அவரது தந்தையான ரன்தீப் சிங்கும் போட்டோகிராபர் என்பதால், அவருடன் இணைந்து பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து இயற்கை அழகைத் தனது கேமராவில் படம் பிடித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இரும்புப் பைப்பை வாழ்விடமாகக் கொண்ட ஆந்தைகளை அவர் எடுத்த படம், அவருக்கு மதிப்புமிக்க விருதை வென்று கொடுத்திருக்கிறது. `Pipe owls' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படம், இங்கிலாந்தின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் (Natural History Museum) நடத்திய போட்டியில் 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர் (Wild Life Photographer of the Year) விருதை வென்றது.

--தமிழ்செல்வன் முருகையா--

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.