முல்லைத்தீவில் 7 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு சாலைப்பகுதியில் இன்று காலை 7 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாலைப்பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட மது ஒழிப்பு போதைத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 7 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குற்றத்துடன் தொடர்புடைய மேலும் சில நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் கைதாகிய சந்தேக நபரிடம் விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#Mullaitivu   #கஞ்சா   #முல்லைத்தீவு  
Powered by Blogger.