விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு!

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காமெடி நடிகர் யோகி பாபு பேசும் போது,

ஷீட்ல இருந்து நேராக வருகிறேன். மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் அண்ணாவுடன் நடித்திருக்கிறேன். மெர்சல் படத்தின் போது ஒரு வசனம் ஒன்று வரும். நல்ல ரசித்தார். அந்த சீன்ல தம்பி யாருடா 5 ரூபா டாக்டர்னு நான் கேட்பேன். பார்க்க யார் பர்ஸ்னாலிட்யாக இருக்கிறாரோ அவர் தான் என்று சொல்வார். அப்போ நீ போப்பா என்று நான் சொல்வேன்.

வேற எந்த ஒரு ஹீரோவாக இருந்தாலும், இவ்வளவு பெரிய இடத்தில் இருந்துகொண்டு அந்த சீனுக்கு விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த சீன் 2 முறை எடுத்தோம். அப்போது அண்ணா சொன்னார், நீ ஏன் உன்னை இறக்கிக்கிற, தைரியமா சொல்லு, இது தொழில் தான் என்றார். அதுலயும் அப்படி பண்ணேன், சர்கார்லயும் ஒன்னு அந்த மாதிரி சொன்னேன். அந்த இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணிட்டு போயிருப்பார் என்று நகைச்சுவையுடன் பேசினார்.

நான் நிறைய நடிகர்களுடன் நடித்து வருகிறேன். தற்போது அஜித் சார், விஜய் அண்ணா என பல முன்னணி நாயகர்கள் மற்றும் நாயகிகளுடன் நடிக்கிறேன். அதில், அண்ணன் விஜய் வேற லெவல் என்றார். 

No comments

Powered by Blogger.