பிரான்சில் இடம்பெற்ற திணைக்களமட்ட திருக்குறள் திறன் போட்டிகள்!

தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் ஏற்பாட்டில் பிரான்சில் திணைக்களமட்டத்தில் நடாத்தப்படும் திருக்குறள் திறன் போட்டிகள் கடந்த (30.09.2018) ஞாயிற்றுக்கிழமை பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
அகவணக்கத்துடன் ஆரம்பமான இப்போட்டியில் 280 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், 12 ஆசிரியர்கள் குறித்த போட்டியை நடாத்தியிருந்தனர்.
முன்னதாக தமிழ்ச்சோலைப் பள்ளிகளிலே பள்ளிமட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன்போட்டிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களே குறித்த திணைக்களமட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
திணைக்களமட்டப்போட்டிகளில் தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கு எதிர்வரும் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு மட்டத்திலான திருக்குறள் திறன்போட்டிகள் இடம்பெறவுள்ள அதேவேளை, இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கான மதிப்பளிப்பு தமிழ்ச்சோலை முத்தமிழ் விழாவில் நடைபெறும் என்று தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தேர்வு நடத்துநர் தெரிவித்துள்ளார்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு) No comments

Powered by Blogger.