இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ரஞ்சி டிராபி காலிறுதிக்கு முன்னேறுமா?

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்பிற்பு 649 ரன்கள் குவித்து முதல்
இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிஷூ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 94 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தத்தளித்து வருகிறது.

இந்தியா 555 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஏறக்குறைய இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தற்போதுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ரஞ்சி டிராபி தொடரில் பிளேட் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறுமா? என்று ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ‘‘வெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நாம் எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால், அனைவருக்கும் என்னுடைய கேள்வி என்னவென்றால், இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பிளேட் பிரிவில் இருந்து ரஞ்சி டிராபி காலிறுதிக்கு தகுதிபெறுமா?. எலைட் பிரிவில் இருந்து முடியாது’’ என்று பதவிட்டுள்ளார்.

#INDvWI

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.