ஐ.எஸ்.எல். கால்பந்து - மும்பை எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் ஆட்டம் சமனில் முடிந்தது

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இதில் கொச்சியில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் கேரளா அணியின் ஹலிசரண் நர்ஜாரி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் பாதியின் இறுதியில் கேரளா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் 93-வது நிமிடத்தில் மும்பை அணியின் பிரஞ்சால் பூமிஜ் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், கேரளா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

#ISL2018 #KeralaBlasters #MumbaiCityFC

No comments

Powered by Blogger.