கொழும்பு மாநகர சபையில் பெண்கள் மீதான வன்முறை!

கொழும்பு மாநகர சபையில் பெண்கள் மீதான வன்முறை பற்றி விசாரணை தொடங்கியுள்ளதாக மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “அத்தகைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆளுநரிடமும் இதனை முன்வைத்துள்ளேன்.

இவ்வாறு இருக்கையில் யாரையும் வன்முறைக்குள்ளாக்க இடமளிக்கவில்லை. இந்த சம்பவத்தில் முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த குற்றச்சாட்டுதொடர்பான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை” என தெரிவித்தார்.

#colombo  #srilanka   #tamilnews #women
Powered by Blogger.