திருகோணமலையில் தேசிய இளைஞர் படையணியாம்??

தேசிய இளைஞர் படையணியில் மூன்று மாத பயிற்சியை முடிவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு கிழக்கு மாகாண தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் கே. எம். ஐ டபிள்யூ.குலதுங்க தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 9 பயிற்சி முகாம்களில் மூன்று மாத பயிற்சிகளை முடிவு செய்தவர்களுக்கு இச்சான்றிதழ் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் 153 ஆண்களும் 93 பெண்களும் சான்றிதழ் பெறவுள்ளதாகவும் தேசிய இளைஞர் படையணியின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மூன்று மாத பயிற்சி நெறியில் ஆளுமை, ஒழுக்கம், தலைமைத்துவம் என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கி இப்பயிற்சி முகாம் இடம் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.


அத்துடன் இரண்டாவது கட்ட பயிற்சி ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் 17 வயது தொடக்கம் 24 வயது வரை பாடசாலை கல்வியை முடித்த மாணவர்கள் இதில் பயிற்சியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூதூர், சேருவில, கிண்ணியா, குச்சவெளி, திருகோணமலை, அட்டாளைச்சேனை, கோமரங்கவெல மற்றும் தெஹியத்தகண்டிய பகுதிகளில் மூன்று மாத பயிற்சி முடித்தவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

#trincomalee   #tamilnews  #srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.