வயல் ஓசை..!


மண்ணிலே விதை போட்டு
விதையிலே வந்த வயலே
மண்ணோடு உமக்கு  திருமணமோ ?
கரு மேகம் பன்னீர் மழை தூவிடுமோ ..?

மண்ணோடு உறவாடி
நிலத்து நீரை நீ வாரி அருந்தி
செழித்து வாழ்வது தான்
உன் இல் வாழ்வின் சிறப்போ ...?

சீண்டி விளையாடும்
தென்றலைக்  கண்டு
சின்னதாய் வெட்கம் கொண்டு
வளைந்து சாய்ந்து நிமிர்ந்து
நீ நின்றாயே இவைக்குப்
பெயர் தான் நாணமோ ......?

கதிரவன் பார்த்து விட்டால்
கரு தரித்து விடுகிறாய்
பனி வந்து தொட்டுப் புட்டால்
உன் கற்பம் காக்கிறாய்
உன்னை விதைத்தவன் விரல்
தொட்டு மகிழ்கிறான் உலகத்தார்
உயிர் காக்கும் அன்னபூரணியே
என்று உனை அழைக்கிறான் ..../

வெயிலோடு உறவாடி
மழையோடு விளையாடி
கரும் புகையோடு போராடி
காற்றோடு சண்டையிட்டு
பனித்துளிதனை  ஏந்தி ......./

அறுபடையின் போது
தாக்கத்தியின்  வலி தாங்கி
புசிக்கவும் பசி தீர்க்கவும் சிதறும்
நெல் மணியை உதறி விடும் வயலே
உருப்படாதவன் நாவிலும் உதிப்பதோ
உன் பெயரே  ....../

இ.சாந்தா


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.