நாணய நிதியம்: தலைமைப் பொறுப்பில் இந்தியர்!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சர்வதேச நாணய நிதியம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளராக இருக்கும் மவுரிஸ் அப்ஸ்ட்ஃபெல்டு இந்த ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்குப் பதிலாக கீதா கோபிநாத் அந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்படவுள்ளார். உலகின் சிறந்த பொருளாதார அறிஞர்களில் கீதா கோபிநாத்தும் ஒருவர். அவர் கல்வித் துறையில் மிகச் சிறப்பான அனுபவம் கொண்டவர். அறிவார்ந்த தலைமைப் பண்பு கொண்டவராகவும், பரந்த சர்வதேச அனுபவம் கொண்டவராகவும் தன்னை நிரூபித்துக் காட்டியிருப்பவர் கீதா கோபிநாத்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியாகிய கீதா கோபிநாத் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 2001ஆம் ஆண்டு பொருளாதாரப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். முன்னதாக டெல்லி பல்கலைக் கழகத்தில் பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார். டெல்லி பல்கலைக் கழகம் மற்றும் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.பட்டங்களும் பெற்றுள்ளார். இவர் தற்போது ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் மற்றும் பொருளாதாரத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

No comments

Powered by Blogger.