ஒலுவில் பிரச்சினைகளுக்கு நிரந்தரத்தீர்வு

ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பினால் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினை மற்றும் மீனவர் பிரச்சினை ஆகியவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பையேற்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளார்.

ஒலுவில் துறைமுக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கிலான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான கருத்துகளையும், தீர்வுத்திட்டங்கள் குறித்தும் இதன்போது விளக்கமளித்துள்ளார்.


கடலரிப்பினால் அழிந்துபோகும் நிலங்களை மீட்பதற்கு, கடல் மண்ணை அகழ்ந்து கடற்கரையை மூடும் இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் டெடிடா நிறுவனம் 50% நிதியை வழங்க முன்வந்துள்ளது.

எஞ்சியுள்ள 50% பணத்தை அரசாங்கம் சார்பில் பெற்று குறித்த இயந்திரத்தை 4 மாதங்களுக்குள் கொள்வனவு செய்யதீர்மானிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.