லெப்.கேணல் பிரதீபராஜ் உட்பட்ட13மாவீரர்களி​ன் நினைவு நாள்!

ஜெயசிக்குறு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருடனான மோதல் மற்றும் பிற நிகழ்வுகளில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் பிரதீபராஜ் உட்பட்ட 13 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
03.10.1998 அன்று ஒலுமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில்,

1.லெப்.கேணல் பிரதீபராஜ் (பூபாலப்பிள்ளை திரேஸ்காந் - மட்டக்களப்பு)

2.லெப்டினன்ட் இதயக்கண்ணன் (சிவலிங்கம் சாந்தலிங்கம் - மட்டக்களப்பு)

3.லெப்டினன்ட் புண்ணியசீலன் (அருணாசலம் ஜெயகுலம் - மட்டக்களப்பு)

4.லெப்டினன்ட் பரிதரன் (பேரின்பம் அரசரத்தினம் - மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம்மாவீரர்களினதும் ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையின் போது விழுப்புண்ணடைந்து இதேநாளில் வீரச்சாவைத் தழுவிய,

1.கப்டன் வெற்றிமணி (நவரதன்) (கணபதிப்பிள்ளை உதயகுமார் - மட்டக்களப்பு)

மாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய,

1.வீரவேங்கை இளங்கன்னி (அடைக்கலம் நாகேஸ்வரி - கிளிநொச்சி)

2.வீரவேங்கை கடல்விழி (பாவந்தி) (கணபதிப்பிள்ளை ரதிமீரா - யாழ்ப்பாணம்)

3.வீரவேங்கை அரவாணன் (தியாகராசா செல்வகுமார் - மட்டக்களப்பு)

அதே பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிய

1.கப்டன் ஆழியன் (முருகன் சத்தியசீலன் - முல்லைத்தீவு)

2.கப்டன் இன்பன் (கணேஸ் ரவி - கிளிநொச்சி)

3.வீரவேங்கை செந்தில்குன்றன் (தர்சன்) சுந்தரலிங்கம் சுவேந்திரன் - மன்னார்)

வவுனியா பனிச்சங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய

1.கப்டன் குணம் (கதிர்நிலவன்)கந்தசாமி சந்திரகுமார் - யாழ்ப்பாணம்)

கிளிநொச்சிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய,

1.2ம் லெப்டினன்ட் இந்திரா (இன்பவள்ளி) (சிவசுப்பிரமணியம் சாந்தினிதேவி - யாழ்ப்பாணம்) ஆகிய மாவீரர்களினதும் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரப்படுகிறது.  

No comments

Powered by Blogger.