கொம்பு வச்ச சிங்கத்தை வெளியிட்ட சிங்கம்!

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைந்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதன் மோஷன் போஸ்டரை தமிழ் சினிமாவில் சிங்கம் என்று அழைப்படும் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தற்போது இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

No comments

Powered by Blogger.