இந்தியாவுடன் அமெரிக்கா ஆலோசனை!

ஈரானுக்கு விதிக்கப்படும் வரிகளால் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் பாதிப்படையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மாற்று வழிகளை அமெரிக்கா ஆலோசித்து வருவதாக அமெரிக்க அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 4ஆம் தேதி முதல் ஈரான் மீதான அமெரிக்காவின் வரி விதிப்புகள் அமலுக்கு வருகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் உலகளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஈரானிடமிருந்து இறக்குமதியை முற்றிலுமாகக் குறைக்கும்படி அமெரிக்கா வலியுறுத்தி வருவதோடு அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. செப்டம்பர் 26ஆம் தேதியன்று நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக் கூட்டத்தின்போது, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரான முகமது ஜாவத் சரிஃப் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார். ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு இந்தியா விரும்புவதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரும் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய மண்டலப் பணியகத்துக்கான துணை உதவிச் செயலாளர் அலைஸ் வெல்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரான் மீதான வரி விதிப்புகளை அமல்படுத்துவது குறித்து அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடனும், கூட்டணி நாடுகளுடனும் விவாதித்து வருகிறது. இந்தியாவுக்குப் பெருமளவில் எண்ணெய் இறக்குமதிக்கான தேவை இருப்பதை நாங்கள் உணர்கிறோம். எங்களது நட்பு நாடான இந்தியாவின் பொருளாதாரம் மோசமாகப் பாதிப்படையாதவாறு எண்ணெய் விநியோகத்துக்கான மாற்று வழிகள் குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான மாற்று விநியோகர்கள் பற்றி இந்திய நிறுவனங்களும் ஆராய்ந்து வருகின்றன. வரி விதிப்புகள் குறித்து இருநாடுகளின் வல்லுநர்களும் கலந்தாலோசித்து வருகின்றனர். இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான விவாதத்தைத் தொடர்வதற்கு அமெரிக்கா விரும்புகிறது” என்று கூறினார்.

#india #trumpt  #iran #tamilnews #modi

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.