சென்னையில் 1000 கிலோ நாய் கறி பறிமுதல்: மாமிச பிரியர்கள் அதிர்ச்சி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வின்போது சுமார் 1000 கிலோ அளவிலான நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டல்களில் மாமிசங்களை விரும்புப வர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கொரிய நாடுகளில் நாய்க்கறி உண்ணப்பட்டு வருகிறது. வட கொரியா மற்றும் தென் கொரியாவில் சத்துள்ள உணவாக நாய் கறி நீண்ட காலமாக கருதப்படுகிறது. கோடை சூட்டை தணிக்க தினமும் 2 முறை பீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ள கொரிய மக்கள, தற்போது நாய் கறி சூப் குடித்து சூட்டை தணித்து வருகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

சென்னையில் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி வரும் கொரிய நாட்டை சேர்ந்தவர்களுக்காக நாய்கறிகள் சமைக்கப்படும் உணவகங்கள் சில நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், சென்னைக்கு நாய்கறி ரயில் மூலம் வருவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஜோத்பூரில் இருந்து ரயிலில் கொண்டுவரப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய ரயில்வே காவல்துறையினர், இந்த இறைச்சி சென்னையில் பிரபல இறைச்சிக் கடையை நடத்தி வரும் கணேஷ் என்பவருக்கு வந்துள்ளதாக கூறி உள்ளனர். அவர் , இதை பல தனியார் அசைவ ஓட்டல்களுக்கு சப்ளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அசைவ பிரியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக ஆட்டுக்கறியின் விலை ஏறிக்கொண்டே இருப்பதால், அசைவ உணவகங்கள் நாயக்கறி, பூனைக்கறி போன்றவைகளை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அசைவ பிரியர்களே. ஓட்டல்களில் மாமிச உணவுகள் சாப்பிடும்போது கவனம்..




No comments

Powered by Blogger.