தமிழீழ மக்களுக்கு யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் அறைகூவல்.!

எமது உறவுகளே நாம் ஒரு பல்கலைக்கழக சமூகமாக ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கின்றோம். தற்கால சூழ்நிலையிலே வாழ்கின்ற தமிழ்

இளைஞர்கள் ஏதோவொரு வகையிலே தேசியத்தின்பால் உந்தப்பட்டு பல்வேறு அரசியல் குழுமங்களுக்கு பின்னால் நிற்க்கின்றீர்கள்.ஆனால் அது உங்களது இலட்சியங்கள் மற்றும் எண்ணங்களை எத்தனை வீதம் நிறைவேற்ற பயன்படுகின்றது என்பது மிகவும் கேள்விக்குறியான விடயம்.

அவ்வாறு உந்தப்பட்டு சென்ற இளைஞர் யுவதிகளை குறித்த அரசியல் கட்சிகளோ சரி அரசியல் குழுமங்களோ சரி தங்களது சுயலாபத்திற்காக உங்களையும் உங்கள் உணர்வுகளையும் பயன்படுத்தி உங்களது கதைளை, உணர்வுகளை, கோரிக்கைகளை கணக்கெடுக்காத நிலைமையிலே நீங்கள் செயற்பட முடியாதவாறு அவர்கள் வைத்திருப்பதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

அவ்வாறான நிலமையில் எங்களது இளைஞர்களாகிய நீங்கள் விழிப்படைந்து உங்கள் கோரிக்கையை ஒற்றுமையாகக் கொண்டுசெல்லக்கூடிய அதாவது உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய தரப்பிருடன் இணைந்து பயணிக்க வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. அந்தவகையில் நீங்கள் இந்த விடயத்தில் மிகவும் அரசியல் தெளிவோடு ஒரு நடுநிலையோடு நீங்கள் தமிழ் மக்களின் நலன் சார்ந்து அனைத்தையும் அலசிஆராய்து செயற்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றீர்கள்.

அத்தோடு இலங்கை தமிழர்களின் அனைத்து செயற்பாடுகளிலும் ஏதோவொரு வகையிலே புலம்பெயர் பிரதேசத்திலுள்ள தமிழ் உறவுகள் பங்களிப்பை வழங்கி வருகின்றீர்கள். அது வரவேற்கத்தக்கது. தொடர்ந்து உங்கள் பங்களிப்பை உரியவாறு எமது நோக்கத்தை சிதைவடையச் செய்யாது தமிழ் தேசியக் கொள்கைப்பற்றோடு உறுதியாக பயணிக்கக்கூடியவர்களை அடையாளம் கண்டு அவர்களினூடாக அந்த உதவிகளை நீங்கள் வழங்குவது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

அத்தோடு புலம்பெயர் பிரதேசத்திலுள்ள அனைத்து நாடுகளிலுமுள்ள தமிழ் உறவுகள் அனைவரும் ஒரு குடையின் கீழே ஒருமித்து ஒற்றுமையான செயற்பாடுகள் மூலம் உங்கள் குரலை நீங்கள் குடுப்பதன் மூலம் தான் எங்கள் தாயகத்தின் விடுதலை சாத்தியப்படும் என்பதனை நாங்கள் இங்கிருந்து அன்பாகவும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.

எமது தமிழ் பிரதிநிதிகள் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் எந்த சந்தர்ப்பத்திலும் பேரினவாத சிந்தனையுடைய தென்னிலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவதில் இதயசுத்தியுடன் செயற்பட போவதில்லை. மாறாக தங்களுடைய அதிகார போட்டிக்காகவே அங்கே தமிழ் மக்களை, தமிழ் மக்களின் பிரதிநிதிகளைப் பயன்படுத்த விளைகின்றனர் என்பதை நீங்கள் அனைவரும் உணர வேண்டும். உங்கள் அனைவரது முடிவிலும் எமது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த கௌரவம் உரிமை அனைத்துமே அடங்கியிருக்கின்றது. அந்த வகையிலே தமிழ் மக்களின் சகல நலன்கள் உரிமைகள் சார்ந்து அனைத்து முடிவுகளையும் தெளிவாக எடுக்க வேண்டும் என நாம் எங்களுடைய தமிழ் பிரதிநிதிகளிடம் அன்பான வேண்டுகோளை விடுக்கின்றோம். மாறாக அவர்கள் தமிழ் மக்களின் நலன்களில் புறமொதுங்கி செயற்படுபவர்களாக இருந்தால் எதிர்காலத்திலே இளைஞர்கள், மத்தியில் தங்கள் மீதான அதிருப்தி இன்னும் வலுக்கும்

அத்தோடு எமது இளைஞர்கள் இதில் விழிப்படைய வேண்டும். இளைஞர்கள் தற்போது விழிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். அதில் யாழ்பல்கலைக்கழகம் பூரண பங்கு வகிக்கின்றது. எதிர்வரும் காலங்களில் இளைஞர்களும் மக்கள் மத்தியிலே அரசியல் விழிப்பூட்டல் செயற்பாடுகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். அத்தோடு அனைத்து மக்கள சமூகமயமாக்கப்பட வேண்டும். சமூகத்தில் ஒட்டுமொத்தமாக ஒற்றுமையோடு எமது மக்களின் கோரிக்கைகள் அபிலாசைகளை வெளிப்படுத்துவனூடாகவே எமது பிரதிநிதிகள் அதற்க்கேற்றவகையில் செயற்பட அது வழிவகுக்குமென நாம் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.