“ பாலம் கல்யாண சுந்தரம் ” தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விட்டார்...தனது 12 வது வயதில்...!

காரணம் ... அவரது குரல்...!

.
எப்போதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் , கல்யாணசுந்தரம் பேசுவதை நீங்கள் கேட்டிருந்தால் , அவரது மனக்குறையை உங்களால் புரிந்து கொள்ள முடியும்..!
அப்படியே பெண் குரல்..!
அதனால் தாழ்வு மனப்பான்மை !
.
எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விட்டார் கல்யாண சுந்தரம் !

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் , தனக்கு கடிதம் மூலம் மட்டுமே அறிமுகமான ஒரு பத்திரிகையாளரை சந்திக்க முடிவு செய்தார். அவரது அலுவலகம் சென்று சந்தித்தார். அழுதபடியே தன் தற்கொலை முடிவை சொன்னார்...!
.
அமைதியாக கல்யாண சுந்தரம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பத்திரிகையாளர் ,
ஒரு சில புத்தகங்களை கல்யாண சுந்தரத்திடம் கொடுத்து படித்துக் கொண்டிருக்கச் சொன்னார்..!

அத்தனையும் படித்து முடிப்பதற்குள் மாலை ஆகி விட்டது..!
.
இப்போது கல்யாண சுந்தரத்தை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார் அந்தப் பத்திரிகை ஆசிரியர் !
.
அங்கே கல்யாண சுந்தரத்துக்கு ,
அந்தப் பத்திரிகையாளர் ஒரு சில உலக சுவாரஸ்யங்களை எடுத்துச் சொன்னார் .. அது இதுதான் :

"தம்பி! ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது , அவன் எப்படிப் பேசுகிறான் என்பதைப் பொறுத்ததல்ல. அவனைப்பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்ததாகும்.
.
எதைக் குறை என்று நினைக்கிறாயோ , அதையே நிறையாக நினைத்துக் கொள்.

உலகின் மாபெரும் இசைஞானி பீத்தோவனுக்கு காது கேட்காது.
உலகையே வியக்க வைத்த ஹெலன் கெல்லர் கண் , காது , வாய் ஊனமுற்றவர்.
உலகையே ஆட்டி வைத்த ஹிட்லர் குள்ளமானவர்.
"பாரடைஸ் லாஸ்ட்" கவிதை மூலம் பலரின் பார்வையை திருப்பிய மில்டன் பார்வை இழந்தவர்.
.
இவர்களெல்லாம் உலகில் சாதனைகள் நிகழ்த்தவில்லையா ? உன் குரலைப் பற்றிக் கவலைப்படக்கூடாது. உன்னைப் பற்றி நாளை உலகமே பேச உள்ளது.
.
என்னால் மெல்லிய குரலில்தான் பேச முடிகிறது என்கிறாய். ஆனால், தாங்கள் விரும்பியதை பேசவே முடியாமல் லட்சக்கணக்கான பேர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களே. அவர்களைப் பார்த்து கவலையை விடு.
.
மனிதன் குறைவாகப் பேச வேண்டும். நிறைய செய்ய வேண்டும். நீ அதிகம் பேசாதிருக்கவே இந்தக் குரல்.
.
எனவே, உன் பேச்சு பற்றி உனக்கு கலக்கம் கூடாது. குறைகளை நினைத்து கவலைப்படுவதைவிட எது குறையோ , அதுவே உன் தனித்துவமான நிறை என்று உறுதி கொண்டு செயல்படு..!
.
எதை நீ தடை என்று எண்ணுகிறாயோ , அதை வைத்து வாழ்வில் சாதனை செய்ய வேண்டும். அவன்தான் வெற்றியாளன். அதற்கான முயற்சியில் நீ ஈடுபட வேண்டும்.
.
தற்கொலை செய்வது பற்றிய எண்ணம் , இனி உனக்கு எந்த காலத்திலும் ஏற்படக்கூடாது"
.
# இதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த பாலம் கல்யாண சுந்தரத்துக்கு , வாழ்வில் ஏதோ ஒரு இனம் தெரியாத நம்பிக்கை ஏற்பட்டது..!
.
இனி ஒருபோதும் தற்கொலை எண்ணம் கொள்வதில்லை என உறுதியாக முடிவெடுத்தார் !
.
அதன் பின் பாலம் கல்யாண சுந்தரம் செய்த சாதனைகளை
நானும் அறிவேன் .. இந்த நாடும் அறியும்..!
.
நிறைய படித்தார்.. கல்லூரி ஒன்றில் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின் , அதன் மூலம் வந்த பென்ஷன் தொகை 11 லட்சம் ரூபாயை , ஒரு ரூபாயைக் கூட தொடாமல்....அப்படியே குழந்தைகள் நலநிதிக்காக அள்ளிக் கொடுத்தார்..!
.
கடைசிவரை கல்யாணம் செய்து கொள்ளவில்லை !
இன்றுவரை இவருக்கென்று குடும்பம் எதுவும் இல்லை..!
.
இவரைப் பற்றி கேள்விப்பட்ட ரஜினி , இந்த கல்யாண சுந்தரத்தை தன்னுடைய தந்தையாக தத்து எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்..!
.
அது மட்டும் அல்ல...! தன் வீட்டிலேயே அவர் தங்கிக் கொள்ள , சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்..!
சிலகாலம் அங்கே தங்கி இருந்த கல்யாண சுந்தரம் , தன் சுதந்திரத்துக்கும் , ரஜினியின் சுதந்திரத்திற்கும் இது சரிப்படாது என்று முடிவெடுத்து , ரஜினிக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்து விட்டார்..!
கண்ணீருடன் கல்யாண சுந்தரத்தை அனுப்பி வைத்தார் ரஜினி..!
.
அதன் பின்னும் அடுக்கடுக்காக சாதனைகள் பல செய்த கல்யாணசுந்தரத்தை
“20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் ” என்று ஐக்கிய நாடுகள் சபை , தேர்வு செய்து பாராட்டி மகிழ்ந்தது..!
.
ஆனால் இதையெல்லாம் பார்த்து மகிழ , பாராட்ட , கல்யாணசுந்தரம் தனது 12 வது வயதில் சந்தித்த அந்தப் பத்திரிகையாளர் இப்போது உயிருடன் இல்லை..!
.
# சரி...! கல்யாணசுந்தரத்தின் சாதாரண வாழ்க்கையை , சரித்திரமாக மாற்றிய அந்தப் பத்திரிகையாளர் யார்..?
.
தமிழ்வாணன்..!
(மே 22, 1926 - நவம்பர் 10, 1977)

ஆம் .. நவம்பர் 10 - தமிழ்வாணன் அவர்களின் நினைவு தினம் .
.
வாழ்க தமிழ்வாணன் புகழ் !

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.