ரணிலை உருவாக்கியது வெளிநாட்டு சக்திகளே–கோட்டாபய

ரணில் விக்கிரமசிங்கவை உருவாக்கியது வெளிநாட்டு சக்திகள் தான் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவிசாவளையில் ‘எலிய’ அமைப்பு நேற்று(சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மகிந்த ராஜபக்ஷ காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியுமே என்று சிலர் கேட்கின்றனர்.

மகிந்த ராஜபக்ஷவினால் அதனைச் செய்ய முடியும் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

தேர்தலுக்காக இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மகிந்த ராஜபக்ஷ காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும்.

ஆனால் பிரச்சினை என்னவெனில், நாடு இன்னமும் ஒன்றரை ஆண்டுகளுக்கு காத்திருக்க முடியுமா? என்பதேயாகும். ரணில் விக்கிரமசிங்கவை உருவாக்கியது வெளிநாட்டு சக்திகள் தான்.

நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது, பார்வையாளர் அரங்கிலிருந்த மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டி அதனை வரவேற்றனர்” என தெரிவித்துள்ளார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #othapaya #Tamilarul.net 
Powered by Blogger.