ஏகதிபத்தியவாதிகளால் சட்டங்களை இயற்ற முடியாது – அநுர

முக்கியமான சட்டங்களை இயற்ற இந்த ஏகதிபத்தியவாதிகளால் முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இன்றைய (திங்கட்கிழமை) நாடாளுமன்ற அமர்வின் பின்னர் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அந்த கட்சியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எந்த வகையான சட்டங்களுக்கும் தற்போது ஒப்புதலை பெற முடியாது.
முக்கியமான சட்டங்களை இயற்ற இந்த ஏகதிபத்தியவாதிகளால் முடியாது. எனவே நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவேண்டிய நிதி மற்றும் சட்டங்கள் தொடர்பான ஒப்புதலை பெற முடியாது.
ஆகவே எதனையும் செய்துக்கொள்ள முடியாத ஒரு நிலைமையில் நான் பிரதமர், பிரதமர் என கூறிகொள்வதில் என்னநியாயம். ஆகவே நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட செயற்பாடொன்றை முன்னெடுப்பதே இவர்களின் நோக்கம்“ என தெரிவித்துள்ளார் 
Powered by Blogger.