ஃபேஸ்புக் தலைவர் பதவி விலக வேண்டும்!


ஃபேஸ்புக் தலைவர் ஜக்கர்பெர்க் பதவி விலக வேண்டும் என்று அந்தக் கம்பெனியின் முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று அமெரிக்க நாளிதழான தி கார்டியன் நேற்று (நவம்பர் 17) செய்தி வெளியிட்டுள்ளது.


சமீபகாலமாக ஃபேஸ்புக்கின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஜக்கர்பெர்க் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வார இதழான நியூயார்க் டைம்ஸ் புலனாய்வு செய்தது. அந்த புலனாய்வு செய்தியில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் ஜக்கர்பெர்க் வாஷிங்டனிலுள்ள டிபைனர்ஸ் பப்ளிக் அஃபையர்ஸ் என்ற கம்பெனியை வாடகைக்கு நியமித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் போட்டியாளர்கள் மீது மோசமான பிரச்சாரத்தை செய்ய வைத்துள்ளதாகப் புலனாய்வில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

வாஷிங்டனிலுள்ள டிபைனர்ஸ் பப்ளிக் அஃபையர்ஸ் என்ற நிறுவனம்தான் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கான மக்கள்தொடர்பு பணியைச் செய்து வந்தது. இக்கம்பெனியானது அந்நாட்டின் குடியரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானது. டிபைனர்ஸ் கம்பெனி ஃபேஸ்புக் நிறுவனத்துடன் வணிகத்தில் போட்டிபோடும் போட்டியாளர்களையும் விமர்சகர்களையும் மோசமாகச் சித்திரிப்பதை ஊக்குவித்துள்ளது. அவர்களைப் பற்றி விமர்சித்து செய்திக் கட்டுரைகளை வெளியிடுவதையும் அனுமதித்துள்ளது என்றும் அந்த புலனாய்வில் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ஜக்கர்பெர்க் மீது அதிருப்தியுற்ற நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் ஜக்கர்பெர்க் தலைமை பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். ஃபேஸ்புக்கில் பெருமளவில் பங்கு முதலீட்டிருக்கும் டிரில்லியம் அசட் மேனேஜ்மென்ட் என்ற கம்பெனியின் மூத்த துணைத்தலைவர் ஜோனாஸ்க்ரோன், ஜக்கர்பெர்க்கை நேரில் அழைத்து தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அர்ச்சுனா கேப்பிடல் என்ற முதலீட்டாளர் கம்பெனியைச் சோ்ந்த நடாசா லேம்ப் என்பவர் கூறுகையில், ஜக்கர்பெர்க் ஒரே சமயத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாகியுமாக இருப்பதால் அனைத்து அதிகாரங்களையும் குவித்து கொண்டிருக்கிறார். இதுதான் பிரச்சினைக்கு காரணமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் ஜக்கர்பெர்க்கும் மற்றும் அதன் பிற தலைமை நிர்வாகிகளும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். டிபைனர்ஸ் கம்பெனி குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

No comments

Powered by Blogger.