கப்டன் ஆதி புருசோத்தமன்10ஆம் ஆண்டு நினைவு நாள்!

கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்த சமூகவியற்துறை மாணவன் புருசோத்தமன் பட்டப்படிப்பை நிறைவு செய்து இரண்டாம் மேல்நிலைவகுப்பில் சித்திபெற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் 01-11-2008 அன்று பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு செல்ல முற்பட்டபோது ,சகபாடியின் காட்டிக்கொடுப்பினால் அரியாலை பகுதியில் இராணுவம் சுற்றிவலைத்தபோது நடைபெற்ற நேரடி தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். இதே சம்பவத்தில் கப்டன் செல்லத்துரை புருசோத்தமன் எதிரியிடம் அகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக குப்பி கடித்து வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

இறுதிக்கட்டப் போர் தீவிரம் பெற்ற போதும் களத்தில் மாவீரர்களாக பல பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகினார்கள்.

No comments

Powered by Blogger.